பல்லடம்: செலக்கரச்சல் கிராமத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில், 48-ஆம் நாள் மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி நேற்று 18 படிகளுக்கு புஷ்ப கலசப் பூஜை, கோ பூஜை, கன்னிகா பூஜை, அன்னாபிஷேகத்துடன் கூடிய மஹா சங்காபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.