பதிவு செய்த நாள்
31
ஜன
2014
03:01
*மனிதர்களை நேசி. அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால், அவர்களின் பாராட்டுக்கு ஆசைப்படாமல் கவனமாக இரு.
*உன்னை ஒருவன் சித்திரவதை செய்யும்போது கூட, அவனிடம் கடவுளைப் பார். அப்போது தான் உனக்கு உண்மை ஞானம் கிடைத்து
இருக்கிறது என உணரலாம்.
*மனதை தூய்மையாக்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைத்து விடு. அவரே உனக்குள்ளிருக்கும் தீமையை அகற்றி விடுவார்.
*உலகில் கடவுளின் பார்வைக்கு அற்பமானது என்று எதுவும்இல்லை. அதுபோல, உன் கண்களிலும் அற்பமானது என்று எதுவும் இருக்க கூடாது.
* விவேகமுள்ள சிறந்த நண்பன் கடவுள் மட்டுமே. ஏனென்றால் நம்மை எப்போது அடிக்க வேண்டும். எப்போது அணைக்க வேண்டும் என்பது நன்கு தெரியும்.
*சோர்வு உன்னை சோர்வடையச் செய்து விடக் கூடாது. அதிலிருந்து விலகி நின்று செயல்படக் கற்றுக் கொள்.
*உத்தமச் செயல்களைச் செய்ய நினைத்தால் உடனடியாகச் செய்து விடுவது நல்லது.
*பிறருக்காக வாழும் பொது நலப் பண்பே, மனிதனுக்கு நன்மையை அளிக்கும்.
*கடவுளின் அருளாட்சியில் தீமையென்று எதுவுமே இல்லை. நலம் அல்லது நலம் தருவதற்கான முயற்சியாகவே எல்லாம் இருக்கிறது.
*அகங்காரத்தை அறவே ஒழித்தால் ஒழிய, கடவுளை நாம் அறிய முடியாது.
*ஆயிரக்கணக்கில் தடைகளையும், தோல்வியையும், துன்பத்தையும் சந்திக்காமல், வாழ்வில் நற்பேறுகளை அடைய முடியாது. தடைக்கற்களே படிக்கற்கள்.
*அன்பால் செய்யும் செயலே உயர்வானது. சிறிய எறும்பின் உயிரைக் காப்பது, ஒரு பேரரசை நிறுவுவதை விட மேலான செயல்.
*தியாகம் செய். ஆனால், தியாகம் செய்ய வேண்டும் என்பதற்காக இல்லாமல், கடவுளுக்காகவும், மனித குலத்திற்காகவும் செய்ய வேண்டும்.
*உன்னை நீயே சோதனைக்கு உள்ளாக்கு. அந்தப் போராட்டத்தால் உன் கீழ்நோக்கிய உந்துதல்களைத் தீர்த்து விடு.
*காலத்தைப் பற்றியோ, வெற்றி பெறுவதைப் பற்றியோ கவலைப்படாதே. உன் பங்களிப்பைச் சரியாகச் செய். கடமையைச் செய்வதில் தான் மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது.
*லட்சியத்தை அடைய விரைந்து செயலாற்று. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் உழைத்தாலன்றி நம் லட்சியத்தை அடைய இயலாது.
*செல்வத்தைப் பறைசாற்றிப் பெருமைப்படுவது கூடாது. உன் எளிமையையும், அடக்கத்தையும் பிறர் பாராட்ட வேண்டும் என்று எண்ணாதே.
*உன்னைக் கடவுள் நேசிக்கும்படி செய்ய உன்னால் இயலவில்லை என்றால் அவரை உன்னுடன் போரிடவாவது செய்ய வை.
*பிறருடைய குறைகளைக் கவனித்தலும், அவர்களைக் குறை கூறித் திரிவதும் தீமையை விளைவிக்கும்.
*வம்பளக்கும் குணத்தை விட்டுவிடு. சாதனைக்கு எப்போதும் அது தடையாகவே இருக்கிறது.
*உன் மனதை வேண்டுமானால் சந்தேகிக்கலாம். ஆனால், கடவுள் உன்னை வழிநடத்துகிறார் என்பதில் சந்தேகம் கொள்வது கூடாது.
*உன்னுள் இருந்து வெளிப்படும் எண்ணம், சொல், செயல் என ஒவ்வொன்றும் கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையாக இருக்கட்டும்.
*மாவில் கலக்கும் உப்பு போல, உயிர்கள் மண்ணோடு மண்ணாகி விடும். அதனால், நல்லதையே சிந்தியுங்கள்.
*சில சமயத்தில் தனி ஒருவரின் வாழ்க்கை, பூமியின் விதியையே நிர்ணயிக்கிறது.