சூரியநமஸ்காரம் போல, தினமும் சந்திரனை வழிபடும் வழக்கம் கிடையாது. சந்திர தரிசனம் எனப்படும் வளர்பிறை துவிதியையில் மூன்றாம் பிறையை வழிபடுவர். இதனால், செல்வ வளம் உண்டாகும். பவுர்ணமி நாளில் விரதமிருந்து கிரிவலம் வரும்போது நிலவை வழிபடுவதால் மனவலிமை கூடும். சங்கடஹர சதுர்த்தி எனப்படும் தேய்பிறை சதுர்த்திநாளில் விநாயகரை வழிபட்ட பின், நிலாவை தரிசித்தால் காரியத்தடை நீங்கும்.