உறையூர்குங்குமவல்லி தாயார் கோவிலில் வளைகாப்பு திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2014 10:02
திருச்சி: உறையூரில் குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் கோயிலில் குங்குமவல்லி தாயாருக்கு 60 வருடங்களுக்கு மேலாகவளைகாப்புத் திருவிழா நடை பெற்று வருகிறது. இங்கு கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் வேண்டி அம்மனுக்கு வளையல்கள், குங்குமம், மஞ்சள் காணிக்கை செலுத்தினர். விழாவை முன்னிட்டு, அம்பாளுக்கு லட்சக்கணக்கான வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விழாவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு வளையல்கள் பிரசாதமாக கொடுக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.