பதிவு செய்த நாள்
03
பிப்
2014
11:02
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜன., மாத உண்டியல் வருமானம் 3கோடியே 49 லட்சத்து 29 ஆயிரத்து 310 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜன., மாத உண்டியல் வருமானம் மூன்று கட்டங்களாக எண்ணப்பட்டது. ஜன., 10 ம் தேதியில் 53 லட்சத்து 40 ஆயிரத்து 757 ரூபாயும், ஜன., 23 ல் 69 லட்சத்து 49 ஆயிரத்து 614 ரூபாயும், ஜன., 24 ல்17 லட்சத்து 79 ஆயிரத்து 647 ரூபாயும் கிடைத்தது. கோசாலை பராமரிப்புக்கு 16 ஆயிரத்து 969 ரூபாயும், அன்னதானத்திற்கு10 லட்சத்து 21 ஆயிரத்து 397 ரூபாயும்,சிவன் கோயில் திருப்பணிக்கு 61 ஆயிரத்து 792 ரூபாயும் வருமானம் கிடைத்தது. உண்டியல்கள் மூலம் மட்டும் ஒரு கோடியே 53 லட்சத்து 61 ஆயிரத்து 57 ரூபாயும், விடுதி கட்டணத்தின் மூலம் 43 லட்சத்து 30 ஆயிரத்து 883 ரூபாயும், மணியடி தரிசனம்( கட்டண தரிசனம்) மூலம் ஒரு கோடியே 52 லட்சத்து 92 ஆயிரத்து 270 ரூபாயும் கிடைத்தது. தங்கம் 806 கிராமும், வெள்ளி 23 ஆயிரத்து 595 கிராமும், வெளி நாட்டு கரன்சி 275 கிடைத்தது. ஆக மொத்தத்தில் 3 கோடியே 49 லட்சத்து 29 ஆயிரத்து 310 ரூபாய் வருமானம் ஜன., மாதத்தில் மட்டும் கிடைத்துள்ளது.