கர்னாடகாவில் சங்கராந்தி அன்று எள்ளுபீரு என்ற ஒரு வழக்கம் உள்ளது. வெள்ளை எள், கொப்பரை தேங்காய், அச்சு வெல்லம், வேர்க்கடலை, பொட்டுக்கடலை ஆகியவற்றை வறுத்து, வெல்லத்துடன் கலந்து பண்டிகையன்று தாம்பூலத்துடன் எடுத்துச்சென்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்குக் கொடுப்பார்கள். அத்துடன் சர்க்கரை அச்சு விதவிதமாகச் செய்து அதனையும் சேர்த்துக் கொடுப்பார்கள். எள்ளு பெல்லாதித்து சிஹி, சிஹி மாத்தனாடி, எள்ளும், வெல்லமும் சாப்பிட்டு இனிமையாகப் பேசுங்கள் என்று சொல்லி வாழ்த்துவார்கள்.