சூரவாதித்த சோழன் மனைவி காந்திமதி, திருச்சி மலைக்கோட்டை தாயுமானவரை வணங்கும் வழக்கம் உள்ளவள். கர்ப்பிணியானபின் அவளால் மலை ஏற முடியவில்லை. எனவே, ஈசன் தன் பக்தைக்காக அவளருகே காட்சி தந்தார். அத்துடன் உமையை குங்கும வல்லியாக பிரசவம் பார்க்கவும் ஏற்பாடு செய்தார். அழகிய குழந்தையும் பிறந்தது. எனவே இக்கோயிலில் தை 3 ம் வெள்ளியன்று குங்குமவல்லிக்கு வளைகாப்பு விழா நடத்துவார்கள். அம்மனுக்குப் படைக்கப்பட்ட நைவேத்யம் வளையல், சரடு, மஞ்சள் குங்குமத்தை பெண்களுக்குத் தருவார்கள். இங்கு ஜெயகாளியை தரிசிக்கலாம். நங்கநல்லூர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் தைமாத 3-ம் வெள்ளியன்று மாங்கல்ய சரடு உற்சவம் நடத்துவார்கள். அம்மனுக்கு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தாலிச்சரடு சார்த்தி பூஜை முடிந்தபின் அதை பெண்களுக்கு பிரசாதமாகத் தருவார்கள்.