குடந்தை ஆதிகும்பேஸ்வரர் கோயிலருகே உள்ள கோயில் ஒன்றின் பெயர், படிதாண்டா பரமேஸ்வரி அம்மன் கோயில் பெயருக்கு ஏற்ப இந்த அம்மன் திருவுலா வருவதில்லை. பச்சைக் காளி, பவளக்காளி அம்மன் உற்சவர்களே திருவுலா காண்கின்றனர். இக்கோயிலில் நடைசாத்தப்பட்டபின் இரவில் அம்மன் பிராகாரத்தில் வலம் வருவதாகவும், அவளது சலங்கை ஒலி சன்னமாகக் கேட்பதாகவும் சொல்லப்படுகிறது.