புராண காலத்திலும், வேதகாலத்திலும் மிகப் புகழ் பெற்ற இடமாகத் திகழ்ந்தது பங்கி எனப்படும் தலம். இது இன்றைக்கும் கான்பூரிலிருந்து எட்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள மிகப் புகழ்பெற்ற அனுமன் கோயிலில் காலையில் சூரிய ஒளியில் பார்க்கும்போது அனுமன் குழந்தை அனுமனாகவும், மதிய நேரத்தில் இளம் வயதினராகவும், மாலை தரிசனத்தின்போது மகாபுருஷராக பெரியவராகவும் காட்சி தருகிறார்.இது பக்தர்களுக்குத் தானாக ஏற்படும் பிரமையா, அல்லது அனுமனே நிகழ்த்தும் அற்புதமா என்பது யாரும் அறியா ரகசியமாக உள்ளது.