பதிவு செய்த நாள்
04
பிப்
2014
10:02
திருப்பதி: திருப்பதியில், பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய தலைமுடியை, பாதுகாப்பாக வைக்க, குளிரூட்டப்பட்ட கிடங்கு கட்ட, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில், கடந்த மாதம் தள்ளி வைக்கப்பட்ட, அறங்காவலர் குழு கூட்டம், அன்னமய்யா பவனில், நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அலிபிரியில், 6 கோடி ரூபாய் செலவில், காணிக்கை முடி பாதுகாப்புக்கு, குளிரூட்டப்பட்ட கிடங்கு அமைத்தல், திருமலையில், 50 கோடி ரூபாயில், பல அடுக்கு கார் நிறுத்துமிடம் கட்டுதல், 11 கோடி ரூபாய் செலவில், 33 கிலோ எடையில், ஏழுமலையானுக்கு, 1,000 பொற்காசுகள் அடங்கிய மாலை செய்தல், ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர பெருமாள் மார்பில் பொருத்த, 64 லட்சம் ரூபாய் செலவில், லக்ஷ?மி உருவம் தங்கத்தில் தயாரித்தல் உட்பட, பல முடிவுகள் எடுக்கப்பட்டன. சென்னையில் உள்ள தேவஸ்தான உள்மட்ட ஆலோசனை கூட்டம் போல், டில்லியிலும், ஐதராபாத்திலும் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.