பதிவு செய்த நாள்
04
பிப்
2014
10:02
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம், வருகிற ௬ம் தேதி துவங்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிரசித்த பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும், மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம் வருகிற ௬ம் தேதி அதிகாலை, 4:30 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும், காலை 6:00 மணி மற்றும் மாலை 7:00 மணிக்கும் உற்சவங்கள் நடைபெற உள்ளன.
நாள் உற்சவம்
6ம் தேதி காலை - விஸ்வரூப தரிசனம், மாலை - மான் வாகனம்
7ம் தேதி காலை - மகர வாகனம், மாலை - சந்திரபிரபை வாகனம்
8ம் தேதி காலை - தங்க சிம்ம வாகனம், மாலை - யானை வாகனம்
9ம் தேதி காலை - சூர்ய பிரபை, மாலை - ஹம்ச வாகனம்
10ம் தேதி காலை - பல்லக்கு, மாலை - நாக வாகனம்
11ம் தேதி காலை - சப்பரம், மாலை - கிளி வாகனம்
12ம் தேதி காலை - திருத்தேர்
13ம் தேதி காலை - பத்ர பீடம், மாலை - குதிரை வாகனம்
14ம் தேதி காலை - ஆள்மேல் பல்லக்கு, மாலை - வெள்ளித்தேர்
15ம் தேதி காலை - சரபம், மாலை - கல்பகோத்யானம்.