வந்தவாசி: நல்லாலம் கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை விக்னேஸ்வர பூஜை, மஹாசங்கல்பம், கணபதி ஹோமம், பூர்ணாஹுதி, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம் உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னர் திங்கள்கிழமை காலை நாடிசந்தானம், தத்வார்ச்சனை, யாத்ரா தானம் உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.