பதிவு செய்த நாள்
07
பிப்
2014
10:02
செய்யூர்: கடுக்கலுார், ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழா கோலாகலமாக நடந்தது. சூணாம்பேடு அடுத்துள்ளது கடுக்கலுார் கிராமம். இங்கு பழமை வாய்ந்த அம்புஜவல்லி நாயிகா உடனுறை ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், தை மாதத்தில் ரத சப்தமி விழா நடைபெறும்.இந்த ஆண்டு நேற்று காலை, 5:30 மணிக்கு சூர்ய பிரபை, ஹம்ச வாகனத்திலும், 7:30 மணிக்கு கருட சேவையும், 9:00 மணிக்கு ஹனுமந்த வாகனத்திலும், 12:00 மணிக்கு அலங்கார திருமஞ்சனத்திலும், பகல் 1:00 மணிக்கு சக்கரத்தாழ்வார் ஆதி புஷ்கரணியில் தீர்த்தவாரியிலும், மாலை 5:00 மணிக்கு யானை வாகனத்திலும், 6:30 மணிக்கு குதிரை வாகனத்திலும், ஆதிகேசவப்பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாளை தரிசனம் செய்தனர்.