பதிவு செய்த நாள்
08
பிப்
2014
11:02
திருப்பதி: திருப்பதியில் உள்ள, கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், இன்று முதல், தெப்ப உற்சவம் துவங்க உள்ளது. இந்நாட்களில், தினமும், மாலை, 6:00 மணிக்கு, கோவிந்தராஜ பெருமாள், தன் நாச்சியார்களுடன், தினம் ஒரு அலங்காரத்தில், திருக்குளத்தில் உலா வருவார். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தை, தேவஸ்தானம், இம்முறை, ஏழு நாட்கள் நடத்த உள்ளது. இன்று துவங்கும் இந்த, தெப்போற்சவம், 14ம் தேதி நிறைவடைகிறது. இதற்காக திருக்குளம் சுத்தம் செய்யப்பட்டு, புதிய நீர் நிரப்பப்பட்டுள்ளது. திருப்பதியிலிருந்து, 12 கி.மீ., தொலைவில் உள்ள, ஸ்ரீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர பெருமாளுக்கு, இம்மாதம், 19ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை, வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 90 லட்சம் ரூபாய் செலவில் துவங்கப்பட்டுள்ள, திருக்குளத்தை அகலப்படுத்தும் பணிகளை, விரைவில் முடிக்க, தேவஸ்தானம், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.