ஆண்டிபட்டி: மழை வேண்டியும், தொழில் வளம் பெருகவும், ஒருமைப்பாடு ஏற்படவும் ஆண்டிபட்டி சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில், யாக வேள்வி பூஜைகள் நடந்தது.சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் உற்சவநாயகி அம்மன் எழுந்தருளி 40 ஆண்டுகள் நிறைவடைந்தது. கோயில் திருப்பணி மற்றும் பராமரிப்பு அறக்கட்டளை சார்பில் நடந்த வேள்வி பூஜையில், சக்கம்பட்டி சாலியர் சமுதாய தலைவர் கணேசன் தலைமை வகித்தார். கோயில் நிர்வாக குழு தலைவர் அருணகிரி, துணைத்தலைவர் கணபதி, அறக்கட்டளை தலைவர் தில்லைநடராஜன், செயலாளர் முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை சிவாச்சாரியார் சேதுராமன் தலைமையிலான குழுவினர் வேத மந்திரங்கள் ஓதி யாக குண்டலங்களில் சிறப்பு பூஜைகள் செய்தனர். கார்த்திகை வழிபாட்டு மன்ற செயலாளர் குருசாமி, அறக்கட்டளை பொருளாளர் ரவி, கவுன்சிலர்கள் அருண்மதிகணேசன், காசிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.