பதிவு செய்த நாள்
08
பிப்
2014
11:02
செஞ்சி:செஞ்சி தாலுகா புதுப்பேட்டையில் உள்ள விநாயகர், திரவுபதியம்மன், முத்துமாரியம்மன், முருகர், கூத்தாண்டவர் மற்றும் நவக்கிரகங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.இதை முன்னிட்டு கடந்த 4ம் தேதி காலை 3 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 5 மணிக்கு யஜமான சங்கல்பம், அக்கினி பிரதிஷ்டை, ஹோமம் நடந்தது.5ம் தேதி காலை 7 மணிக்கு விசேஷ ஹோமம், மகா சாந்தி ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. மாலை 4 மணிக்கு சாற்று முறை, தீபாராதனை நடந்தது.நேற்று காலை 5 மணிக்கு விஸ்வரூபம் தரிசனம் மற்றும் யாகசாலை பூஜைகள் முடிந்து 9 மணிக்கு கடம் புறப்பாடும், 9.30 மணிக்கு விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகமும், 10 மணிக்கு திரவுபதியம்மன், முத்துமாரியம்மன், முருகர், கூத்தாண்டவர், நவக்கிரக சன்னதிகளுக்கு ஒரே நேரத்தில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. 10.15 மணிக்கு மூலவர் மகா அபிஷேகம் மற்றும் சாற்று முறை, தேவகோஷம், தீர்த்த பிரசாதம் ஆகியன வழங்கினர்.மாலை 6 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், இரவு வாணவேடிக்கை மற்றும் செண்டை மேளத்துடன் சுவாமி வீதியுலா நடந்தது.