சிந்தலக்கரை வெக்காளியம்மன் கோயிலில் சர்வ மதி பிரார்த்தனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2014 11:02
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரை வெக்காளியம்மன் கோயிலில், அம்மனுக்கு பால் அபிஷேகமும், சர்வ மத கூட்டுப்பிரார்த்தனையும் நடந்தது. சிந்தலக்கரையில் 42 அடி உயரமுள்ள வெட்காளியம்மன் கோயில் உள்ளது. நேற்று காலை 8.30 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அதன் பின்பு 9 மணிக்கு சர்வ மதத்தினர் கலந்து கொண்ட கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. இதில் முஸ்லிம் மதத்தின் சார்பில் மதுரை ஹாஜியார் ஜாமல் முகைதீன், கிறிஸ்தவ மதத்தின் சார்பில் கீழ இரால் பாதிரியார் அமலராஜ், இந்து மதத்தின் சார்பில் ராமமூர்த்தி சுவாமிகள் கலந்து கொண்டு பிரார்த்தனை நடத்தினர். பின்பு மதியம் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான வெளி மாநில பக்தர்கள் கலந்து கொண்டனர்.