கன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) தம்பதியர் ஒற்றுமை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2014 04:02
அனைவரையும் கவரும் இயல்புள்ள கன்னி ராசி அன்பர்களே!
சூரியன், சுக்கிரனால் நன்மை உண்டாகும். புதன், மார்ச் 9 க்கு பிறகு நற்பலனைக் கொடுப்பார். இதனால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர். தம்பதியரிடையே பாச உணர்வு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.பிப்., 24 க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சூரியனால் பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் சேரும். ஆரோக்கியம் மேம்படும். செவ்வாய் ராசியில் இருந்து, தடைகளை உருவாக்கினாலும், எளிதாக முறியடிப்பீர்கள். சுக்கிரனால் குடும்பத்தில் வசதி வாய்ப்பு அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேம்படும். மார்ச் 9க்கு பிறகு, புதிய தொழில் தொடங்க ஏற்ற காலம். தொழிலை விரிவுப்படுத்தும் எண்ணம் நிறைவேறும். பணியாளர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்துவர். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். விரும்பிய பணி, இடமாற்றம் பெறலாம். மார்ச் 24க்கு பிறகு, பணியில் உன்னத பலன்களை எதிர்பார்க்கலாம்.வேலையின்றி இருப்பவர்கள், புதிய வேலை கிடைக்கப் பெறுவர். கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் நல்ல பணப்புழக்கத்துடன் இருப்பர். தலைமையின் ஆதரவால், புதிய பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு பழ வகைகளில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க அனுகூலம் காணப்படவில்லை. வழக்கு விவகாரங்களில் பின்னடைவு ஏற்படலாம். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம். பெண்கள் கணவர் குடும்பத்தாரிடம் நன்மதிப்பைப் பெறுவர். உங்களால் குடும்பம் சிறப்படையும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வர். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது அவசியம். புதன் மார்ச் 9க்குப் பிறகு சாதகமாக இருப்பதால் நல்ல மதிப்பெண் கிடைப்பதோடு, போட்டிகளில் வெற்றியும் காணலாம்.
நல்ல நாள்: பிப்., 13,14,18,19,22,23,28, மார்ச் 1,2,3,9,10, 11,12,13 கவன நாள்: மார்ச் 4,5,6 அதிர்ஷ்ட எண் : 7,9 நிறம்: செந்தூரம், வெள்ளை வழிபாடு: சிவன், துர்க்கை வழிபாடு நன்மை தரும். செவ்வாய், வெள்ளியன்று முருகனையும் வழிபட்டு வாருங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2025 முதல் 14.5.2025 வரை) »