துலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) குடும்ப மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2014 04:02
கடும் உழைப்புக்கு உதாரணமான துலாம் ராசி அன்பர்களே!
குரு தொடர்ந்து நற்பலன் கொடுப்பார். புதன் மார்ச் 10 வரை நன்மை செய்வார். சுக்கிரன் பிப்., 25ல் மகரத்திற்கு சென்றாலும், மாதம் முழுவதும் நன்மை செய்வார். மற்ற கிரகங்களில், சனிபகவானின் 3-ம் இடத்துப்பார்வை மட்டும் சாதகமான இடத்தில் விழுகிறது. இதன் மூலம் காரிய அனுகூலத்தையும், பொருளாதார வளமும், குடும்ப மகிழ்ச்சியும், தொழில் விருத்தியும் இருக்கிறது. நினைத்த செயலை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவு மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். புதன் 4-ம் இடத்தில் இருப்பதால் பொருள் சேரும். தேவையான வசதிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் குறையாது. பெண்களால் இருந்து வந்த இடையூறு மறையும். ஆனால், போட்டியாளர்களின் தொல்லைதலை தூக்கும். கவனம். மார்ச் 9க்கு பிறகு, தொழில் ரீதியாக சிலர் தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிய வேண்டியிருக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மார்ச் 9க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டி வரும். விண்ணப்பித்துள்ள சலுகைகளுக்காக அவசரப்பட வேண்டாம். தாமதமாக கிடைக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் தங்கு தடையின்றி கிடைக்கும். அரசியல்வாதிகள், உழைப்புக்கு ஏற்ற பலனை எதிர்பார்க்க முடியாது. மாணவர்கள், கல்வியில் சிறப்படைவர். ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெற கடுமையாக பயிற்சி எடுக்க வேண்டியிருக்கும். விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானம் பெறலாம். கால்நடை செல்வம் பெருகும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.பெண்கள், குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். வீட்டுச்செலவுக்கு போதுமான பணம் இருக்கும்.
நல்ல நாள்: பிப்., 13,14,15,16,17,20,21,24,25, மார்ச் 3,4,5, 12,13,14 கவனநாள்: மார்ச் 6,7,8 சந்திராஷ்டமம். அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை, மஞ்சள் எண்: 4,6 வழிபாடு: தினமும் காலையில் சூரியனை வழிபடவும். முருகன் கோயிலுக்கு சென்று வாருங்கள். இதனால் உடல் நலம் சிறப்படையும்..நவக்கிரகங்களில் ராகு-கேதுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2025 முதல் 14.5.2025 வரை) »