பதிவு செய்த நாள்
11
பிப்
2014
04:02
என்ன நடந்தாலும் மனம் தளராத விருச்சிக ராசி அன்பர்களே!
கேது,செவ்வாய் மாதம் முழுவதும் நற்பலனைக் கொடுப்பர். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். சுக்கிரன் பிப்.,25ல் மகரத்திற்கு சென்றாலும் அவர் மாதம் முழுவதும் நன்மை தருவார். புதன் மார்ச் 9-க்கு பிறகு கும்பத்தில் நின்று குடும்ப நிலையை மேம்படுத்துவார். பொருள் சேரும். உங்கள் முயற்சியில் தடைகள் வந்தாலும், செவ்வாயால் அதை முறியடித்து வெற்றி காணும் வல்லமையை பெறுவீர்கள். பணப்புழக்கம் இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும்.கேதுவால் அபார ஆற்றல் பிறக்கும். சுக்கிரனால் மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது கிடைக்கும். பிப்.,24க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அரசின் சலுகை கிடைக்கும்.பெண்களால் தொல்லைகள் வரலாம். கேதுவின் பலத்தால் எந்த தொய்வும் ஏற்படாது. பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வேலையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். உங்கள் பொறுப்புகளை வேறுயாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். மார்ச் 9க்கு பிறகு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம், விருது, பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியிருக்கும். மார்ச் 9க்கு பிறகு, புதன் சாதகமாக இருப்பதால். போட்டிகளில் வெற்றி காண்பீர்கள். விவசாயிகள் நல்ல வருவாய் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்குகள் சாதகமான பாதையில் செல்லும். பெண்கள், கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். நகை வாங்குவர். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரும்.
நல்ல நாள்: பிப்ரவரி 15,16,17,18,19,22,23,26,27, மார்ச்5,6,7,8
கவன நாள்: மார்ச் 9,10. சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெள்ளை. எண்: 5,7
வழிபாடு: வியாழக்கிழமை குருவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். சனிக்கிழமை பெருமாள், ராமரை வணங்கி வாருங்கள்.