பதிவு செய்த நாள்
11
பிப்
2014
04:02
எதிலும் சாதித்துக் காட்டும் தனுசு ராசி அன்பர்களே!
சனி, ராகு, குருவால் நன்மைகள் தொடரும். சுக்கிரன்,சூரியன் மாதம் முழுவதும் நற்பலன் தருவார்கள். செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் கூடும். பெண்கள் மூலமாக பொருள் சேரும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால், மார்ச் 9வரை அவப்பெயர் வரலாம். குடும்ப, அலுவலக விஷயங்களில் ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் கவலையும், எதிரிகளால் இடையூறும் வரலாம். குடும்பத்தில் ஆனந்தம் தொடரும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். பிள்ளைகள் வகையில் இருந்து வந்த பிரச்னை மறையும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் அனுகூலம் தரும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். சிலர் வீடு கடைகள் அதிகாரிகளால் சோதனைக்கு ஆளாகலாம். செவ்வாயால் போட்டியாளர்களின் தொல்லை ஏற்படும். பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு.பணியாளர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருந்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. குரு சாதகமாக இருப்பதால் எந்த பிரச்னையையும் எதிர்கொள்ளும் சாமர்த்தியம் இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்களும், போதுமான வருவாயும் கிடைக்கும். புகழ் பாராட்டு பெறுவர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் பொதுவாக சிறப்பான பலனை பெற்று வந்தாலும், புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சற்று முயற்சி எடுத்து படிக்க வேண்டியிருக்கும். சிலருக்கு போட்டிகளில் வெற்றி கிடைப்பது அரிது. விவசாயிகளுக்கு கிழங்கு, நிலக்கடலை, மொச்சை போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். பெண்களுக்கு பணவரவும், அக்கம் பக்கத்தினர் அனுசரணையும் உண்டு. பயணத்தின் போது கவனம் தேவை.
நல்ல நாள்: பிப்ரவரி 18,19,20,21,24,25,28, மார்ச்1,2,7,8,9, 10,11
கவனநாள்: பிப்., 13,14 மார்ச்12,13 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள். செந்தூரம் எண்: 2,3,9 .
வழிபாடு: முருகன் கோயிலுக்கு சென்று துவரை தானம் செய்தால் உடல் நலம் சிறப்படையும். பைரவர் வழிபாடு தன்னம்பிக்கையைக் கொடுக்கும்.