இம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2014 10:02
மதுரை: மதுரை மேலமாசி வீதியில் உள்ள சிவபெருமானே சிவபெருமானை வழிபட்ட இம்மையிலும் நன்மைதருவார் கோயிலில் மாசிப் பெருந்திருவிழா, 5ம் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. விழாவில் தினமும் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்சியான திருக்கல்யாண விழா இன்று காலை 6.41க்கு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று (பிப்.12) மாலை 3.00 மணிக்கு சிறப்பு மஹா அபிஷேகமும் மாலை 4.00 மணிக்கு பிரதோஷ பூஜையும் நடைபெறுகிறது.