பதிவு செய்த நாள்
13
பிப்
2014
11:02
செங்கல்பட்டு: சிங்கப்பெருமாள் கோவிலில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், எட்டு லட்ச ரூபாய் மதிப்பில், கண்ணாடி அறை திறக்கப்பட்டுள்ளது. சிங்கப்பெருமாள் கோவில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நிர்வாக அனுமதியுடன், இக்கோவிலில், சென்னை அடையாறைச் சேர்ந்த ரவி என்பவர், எட்டு லட்சம் ரூபாய் மதிப்பில், கண்ணாடி அறை செய்து கொடுத்தார். தசாவதாரக் காட்சிகளுடன், இந்த கண்ணாடி அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை, இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் செந்தில்வேலன் திறந்துவைத்தார். உதவி ஆணையர் மோகன சுந்தரம், செயல் அலுவலர் வீருபொம்மு மற்றும் கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர். விழாக் காலங்களில், நரசிம்மபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் கண்ணாடி அறையில் எழுந்தருளச் செய்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.