பதிவு செய்த நாள்
13
பிப்
2014
11:02
மதுரை: மதுரையில், சத்குரு சங்கீத சமாஜத்தின், 62வது ஆண்டு இசை விழா நி??வு நாளில், சங்கீத வித்வான் டி.எம். கிருஷ்ணா குழுவினரின் வாய்ப்பாட்டு கச்சேரி நடந்தது.முதல் படைப்பாக, நாத ரூபமாக இறைவனை சங்கராபரண ராகத்தில் நாதவிந்தம் பஜேஹம் என்று தொடங்கும் முத்துச்சாமி தீட்சிதர் கிருதியை பாடினார், கிருஷ்ணா. அடுத்து கானடா ராக ஆலாபனை சிறந்த முறையில் இருந்தது. தானம் தொடர்ந்து நாதமாக வர, நெரநம்மிதி என துவங்கும் கானடா ராக அடதாள வர்ணத்தை பாடினார். சரண சாகித்யத்திற்கு மனோதர்ம கற்பனா ஸ்வரங்களை பாட, அரங்கத்தில் கை தட்டல் ஒலித்தது.தொடர்ந்து, தேவகாந்தாரி ராகத்தில், ஆதி தாளத்தில், கோபால கிருஷ்ண பாரதியார் பாடிய தமிழ் பாடல் எந்நேரமும் உந்தன் சன்னதியிலே நான் இருக்க வேண்டும், ஐயா என்று உணர்வுப்பூர்வமாக பாட, ரசிகர்கள் உள்ளத்தை கவர்ந்தது. பக்கவாத்தியம், வயலின் வாசித்த அக்கரை சுப்புலட்சுமி, தனக்கே உரிய லாகவத்தோடு இசையை அரங்கில் நிறைத்தார். மிருதங்கம் பிரசாத், அனுபவம் வாய்ந்த கலைஞர். அக்கரையாக கச்சேரியை கொண்டு செல்ல, காஞ்சிரா வாசித்த புரு ?ஷாத்தமனும் லயத்தில் துணை நின்றார். கச்சேரியின் அடதாள வர்ணத்தில் தனி ஆவர்த்தனம் அற்புதம், புதுமை.பூர்வகல்யாணி ராகத்தில், நினுவினா என்ற கிருதி மிஸ்ர சாபு தாளத்தில் பாடியது நேர்த்தி. அடுத்து மாளவி ராகத்தில் தியாகராஜர் அருளிய நெனருஞ்சின என்ற ஆதீ தாள கீர்த்தனை சிறந்த தேர்வாக விளங்கியது.