மேட்டுப்பாளையம் : சிறுமுகை அன்னதாசம்பாளையத்தில் மாதேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று, கிரிவலம் நடந்து வருகிறது. இக்கோவிலில் இன்று மாசி மாத பவுர்ணமி, பிரதோஷம், மகா சிவராத்திரி என முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மதியம் 2.00 லிருந்து மாலை 5.00 மணி வரை பஜனையும், அதை தொடர்ந்து பக்தி சொற்பொழிவும் நடக்க உள்ளது. இரவு 7.00 மணிக்கு கிரிவலம், தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது. பின், கிரிவலப் பயணம் துவங்குகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.