பதிவு செய்த நாள்
15
பிப்
2014
10:02
திருத்தணி: திருத்தணி மலைக்கோவிலில் நேற்று அதிகாலை, உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மைக்கும் திருமணம் நடந்தது. திருத்தணி முருகன் கோவிலில், மாசி பிரம்மோற்சவ விழா, கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, மலைக்கோவிலில் உள்ள, வள்ளி மண்டபத்தில், முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. நாளை மாலை, 4:00 மணிக்கு சப்தாபரணத்துடன் மாசி பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.