தீட்சை என்றால் அறியாமையைப் போக்கி நல்லறிவைத் தருவது என்று பொருள். இன்பமாய் வாழ்வதற்கு அடிப்படைக் காரணமே நல்ல அறிவு தான். நல்ல குருநாதரிடம் உபதேசம் பெற்று இறைவழிபாடு செய்பவர்களுக்கு மாத்திரமே அறியாமை நீங்கி, நல்லறிவும் இறையருளும் கிடைக்கும். இதற்குப் பெயர் தான் தீட்சை பெறுதல். தீய பழக்கங்களை விடுதல், தீய செயல்களை செய்யாதிருத்தல் ஆகியன தீட்சை பெறுவதற்கு அடிப்படைத் தகுதிகள். நிலையான இன்பமும் முழுமையான இறையருளும் நமக்குக் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமே மேலான தகுதி.