Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக ... அரங்கநாதர் கோவிலில் தண்ணீர் பந்த சேவை! அரங்கநாதர் கோவிலில் தண்ணீர் பந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூலக்கல் மாரியம்மன் கோவில் திருப்பணிகள் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 பிப்
2014
10:02

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சூலக்கல் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா திருப்பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் தாமதப்படுத்தப்படாமல், விரைவில் முடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு ஒன்றியத்தில் அமைந்துள்ளது சூலக்கல். இந்த ஊரில், பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த சூலக்கல் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், கருவறையில், வடக்கு திசை பார்த்த சூலாயுத வடிவில் அம்மன் சுயம்புவாக தோன்றுவது இங்கு மட்டும் தான். இதனால், இக்கோவில் தனித்துவம் பெற்றுள்ளது. கிழக்கு திசை நோக்கி விநாயகரும், வடக்கு மூலஸ்தானத்தில், உற்சவ மூர்த்தி சன்னதிகளும் உள்ளன. 10 அடி உயரமுள்ள குதிரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு வருபவர்களுக்கு நல்லதே நடப்பதாகவும்; வயிற்றுவலி, வயிற்று போக்கு, வாந்தி போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலுக்கு வந்து விரதமிருந்து பிரார்த்தனை செய்தால், உடனே குணமாகிறது. அம்மை நோயால், பாதிக்கப்பட்டவர்கள், கை, கால் வலி, குழந்தையின்மை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உருவ பொம்மை செலுத்தி வழிபாடு செய்வதால், இப்பிரச்னைகளும் தீரும் என்பது ஐதீகமாக உள்ளது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்விழா மூன்று நாட்கள் நடக்கும் போது, கிராமமே களை கட்டும். பல்வேறு பகுதியிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இந்த கோவிலில், கும்பாபிேஷக விழா கடந்த 1994ம் ஆண்டு நடத்தப்பட்டது. பின், போதுமான புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளாததால், உள்கட்டமைப்பு, மண்டபம், சுற்றுச்சுவர் அனைத்தும் சிதிலமடைந்து காணப்பட்டது. புனரமைப்புப்பணிகள் மேற்கொள்ளாததால், கும்பாபிேஷகமும் நடைபெறவில்லை. புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளாமல், சிதிலமடைந்த கோவிலிலேயே பூஜைகள் நடைபெற்று வந்தன. மேலும், தேரும் கரையான் அரித்து பழுதானதால், தேர்த்திருவிழாவும் நடைபெறவில்லை. இக்கோவிலை புனரமைக்கவும்;தேரை புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில், பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டன. ஆனால், பணிகள் வேகப்படுத்தப்படாததால், கும்பாபிேஷகம் நடைபெறுவது தாமதமாகி வருகிறது. இப்பணிகளை விரைவுப்படுத்தி கும்பாபிேஷகம் நடத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். இந்நிலையில், மீண்டும் பணிகள் துவங்கப்பட உள்ளன. இன்று முதல் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. விரைவில் கும்பாபிேஷகம் இது குறித்து இந்துசமய அறிநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சூலக்கல் மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவிலில், அம்மன் விமானம் மற்றும் முன்மண்டபம் ஆகியவை பஞ்சவர்ணம் பூசி கும்பாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு, கும்பாபிேஷகம் விரைவில் நடத்தப்படும். இதுபோன்று, கோவிலில், அம்மன் திருத்தேர் புதிதாக செய்ய முடிவு செய்யப்பட்டு, 27 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அனுமதி பெறப்பட்டுள்ளது. தற்போது திருத்தேர் பணிகளும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar