கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் வாசவி கிளப், வனிதா கிளப் சார்பில் உலக அமைதி வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.கச்சிராயபாளையத்தில் உள்ள வாசவி மஹாலில் வாசவி கிளப் மற்றும் வாசவி வனிதா கிளப் சார்பில் உலக அமைதி வேண்டி பஞ்ச தேவதைகளுக்கான பூஜை கடந்த 14ம் தேதி நடந்தது. விநாயகர், பெருமாள், கன்னிகா பரமேஸ்வரி, சிவன், மகாலஷ்மி ஆகிய சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.நிகழ்ச்சியில் ஆர்ய வைஸ்ய சங்க தலைவர் செல்வராஜ், முன்னாள் தலைவர் ராஜசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். வாசவி வனிதா கிளப் செயலாளர் காயத்ரி இந்திரகுமார் நன்றி கூறினார்.