வீரசோழபுரம் சிவன் கோவிலுக்கு புதிய தேர் உருவாக்கும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2014 11:02
தியாகதுருகம் : வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு 33 லட்சத்தில் புதிய தேர் உருவாக்கும் பணிகள் துவங்கியது. தியாகதுருகம் அடுத்த வீரசோழபுரத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான அபிதகுஜலாம்பாள் சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. மணிமுக்தா ஆற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவில் சிவனை வழிப்பட்டால் பாவம் நீக்கி முக்தி தரும் தலமாக சிறப்பு பெற்றுள்ளது. பராமரிப்பு இன்றி கோவில் சேதமடைந்த நிலையில் உள்ளதால், விரைவில் திருப்பணிவேலைகள் துவங்க பக்தர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பிரமோற்சவ விழாவில், கோவில் தேரோட்டம் நடந்து வருகிறது. இதற்கு புதிய தேர் வடிவமைக்க வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்து அறநிலையத்துறை சார்பில் புதிய தேர் உருவாக்க 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பக்தர்கள் தரப்பில் நிதி சேகரித்து 33 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் வடிவமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது. இலுப்பை மரங்களை கொண்டு 13 அடி உயர தேர் அடி பீடம் செய்யப்படுகிறது. இதில் பல்வேறு மரச்சிற்பங்களும் கலைநயத்துடன் செய்து வடிவமைக்கப்படுகிறது. ஸ்தபதி சின்னராஜ் தலைமையில் பணிகள் நடந்து வருகிறது.அடுத்த ஓராண்டில் தேர் வடிக்கும் பணிகள் முடிந்து தே@ராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.