பதிவு செய்த நாள்
17
பிப்
2014
05:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் பழமை மாறாமல் தூண்கள், சிற்பங்கள் வார்னிஷ் முலம் பளீச்சென மாற்றப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், இந்த கும்பாபிஷேகம் நடத்த இந்து அறநிலைத்துறை திட்டமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகிறது. கோயில் மூன்றாம் பிரகாரம், சேதுபதி மண்டபம் சீரமைக்கப்பட்டதை அடுத்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி, முதல் பிரகார தூண்கள், சிற்பங்கள் பழமை மாறாமல் இருக்க, 50 லட்ச ரூபாயில் மராமத்து பணி நடந்தது. இதில் கருங்கல் தூண், சிற்பங்களை வாட்டர் பிரஷர் வேட்டிவ் செய்து, இறுதியாக பாலிமர் கோட்டிங்(ரசாயன கலவை) பூசும் பணி நடந்து வருகிறது. இப்பணி ஒரிரு மாதங்களில் முடிந்தவுடன் தூண்கள், சிற்பங்கள் கலை அம்சம் மாறாமல், பளிச் சென காட்சியளிக்கும். பழங்காலத்தில் தூண், சிற்பங்கள் நிறுவியது போன்ற தோற்றத்தை பக்தர்கள் கண்டு ரசிக்கலாம் என, கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.