முத்தூர்: திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே விநாயகர், பழனிஆண்டவர் கோவில்களில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 14ம் தேதி கணபதி, லட்சுமி, நவகிரக ஹோம பூஜையுடன் விழா தொடங்கியது. கடந்த 16ம் தேதி விக்னேஷ்வர பூஜை நடத்தப்பட்டு விமான கோபுர கலசம் வைக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை கோபுர கலசத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.