பதிவு செய்த நாள்
24
பிப்
2014
11:02
திருப்பூர்: திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில், வடக்கு பகுதி ரோட்டில், "பார்க்கிங் வசதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள், தங்கள் வாகனங்களை கோவில் முன் நிறுத்திச் செல்கின்றனர். இப்பகுதியில், ரோடு குறுகலாக உள்ள நிலையில், இரு புறமும் வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. விசேஷ காலங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கிறது. கோவில் மதில் சுவரின் வடக்கு பகுதியில் உள்ள ரோடு, போக்குவரத்து இல்லாமலும், திறந்தவெளி சாக்கடை கால்வாய், குப்பை தொட்டி வைக்கும் இடமாகவும் பயன்படுகிறது. குப்பை சிதறிக்கிடப்பதோடு, கோவில் சுற்றுச்சுவர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்படுதால், சுகாதாரக்கேடு, துர்நாற்றம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், மதில் சுவரை ஒட்டியுள்ள, சாக்கடை கால்வாய்க்கு மூடி அமைக்கவும், கோவிலுக்கு வரும் வாகனங்கள் அந்த ரோட்டில் "பார்க்கிங் செய்யவும், மாநகராட்சி, அறநிலையத்துறை மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். "பார்க்கிங் ஏரியாவை மாற்றும் போது, விஸ்வேஸ்வரர் கோவில் முன் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கப்படுவதோடு, வடக்கு பகுதி ரோடும் சுத்தமாக மாறும் வாய்ப்பு ஏற்படும்.