விழுப்புரம் : மகா சிவராத்திரியையொட்டி விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க லட்டு தயார் செய்யும் பணி நடந்தது. மகா சிவராத்திரியையொட்டி விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் நாளை (27ம் தேதி) காலை 7:00 மணிக்கு 1008 சங்குஸ்தாபனம் பூஜை ஹோமம் நடக்கிறது. பகல் 12:00 மணிக்கு பூர்ணாஹூதி, மாலை 6:00 மணிக்கு முதல்கால பூஜை, இரவு 9:00க்கு இரண்டாம் கால பூஜை, 11:00க்கு மூன்றாம் கால பூஜை 1008 சங்காபிஷேகம் நடக்கிறது. பின்னர் 28ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு நான்காம் காலபூஜை, 5:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. இதை யொட்டி கைலாசநாதர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க நேற்று முதல் 30 ஆயிரம் லட்டு தயார் செய்யும் பணியில் பிரதோஷ பேரவை நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.