பதிவு செய்த நாள்
26
பிப்
2014
11:02
சேலம்: சேலம், உடையாப்பட்டி, ஸ்கந்தாஸ்ரமத்தில், மஹா சிவராத்திரி விழா நாளை கொண்டாடப்படுகிறது. குருகுல ப்ரார்த்தனை மண்டபத்தில், இரவு, 7.30 மணியளவில், 11 கலசங்கள் வைத்து, மஹான்யாஸ ஜபம் நடக்கிறது. இரவு, 8.30 மணியளவில், 11 ஆவிர்த்தி ருத்ரஜபம் செய்து, 10 மணிக்கு மேல் நான்கு காலயாக பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து, வல்லப கணபதி, நர்த்தன கணபதி, வலம்சுழி கணபதி, சிவகாமியம்மாள், சமேத ஸ்ரீ நடராஜர், ஞானஸ்கந்தகுருநாதர், புவனேஸ்வரர், ஸ்ரீ சிவானந்தர் உள்ளிட்ட ஸ்வாமிகளுக்கு நான்குகால யாக பூஜை, அதிகாலை, 5 மணி வரை நடைபெறும். எனவே, அபிஷேகத்துக்கு தேவையான பால், தயிர், தேன், பழ வகைகள், சந்தனம், பன்னீர், மஞ்சள் குங்குமம், விபூதி உள்ளிட்ட பூஜை பொருட்களை வழங்கலாம். விழா ஏற்பாடுகளை டிரஸ்டி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.