மார்ச் 7ல் திருப்பரங்குன்றம் பங்குனித் திருவிழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27பிப் 2014 10:02
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பங்குனித் திருவிழா மார்ச் 7ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.கோயிலில் மார்ச் 6ல் அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தியும், மார்ச் 8ல் பிள்ளையார் திருவிழாவும், மார்ச் 13ல் வெள்ளியானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள, பக்தர்கள் கை பாராமாக தூக்கிச் செல்லும் நிகழ்ச்சி, மார்ச் 17ல் பங்குனி உத்திரம், மார்ச் 18ல் சூரசம்ஹார லீலை, மார்ச் 19ல் பட்டாபிஷேகம், மார்ச் 20ல் திருக்கல்யாணம், மார்ச் 21ல் தேரோட்டம், மார்ச் 22ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள் பாலிப்பார்.முருகனுக்கு தங்க பூணூல்சுப்பிரமணிய சுவாமிக்கு, மதுரை பக்தர் ஒருவர் 420 கிராம் தங்க பூணூல் உபயமாக வழங்கினார். பூநூலின் முகப்பில் ஓம் எழுத்திலுள்ள வேலில் மட்டும் வைர கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. தங்க பூணூல் நேற்று மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சாத்துப்படி செய்யப்பட்டது. ஐம்பத்து இரண்டரை பவுன் எடை கொண்ட தங்க பூணூலை தினம் மூலவர் திருமேனியில் சாத்துப்படி செய்வது குறித்து கோயில் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.