பதிவு செய்த நாள்
28
பிப்
2014
11:02
பழநி: மகா சிவராத்திரியை முன்னிட்டு, பழநி பெரியாவுடையார் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் உட்பட பலகோயில்களில், குல தெய்வ வழிபாடு, சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று மகா சிவராத்திரி, பிரதோஷத்தை முன்னிட்டு, பழநி, கீரனூர், தொப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி உட்பட அனைத்து இடங்களிலுள்ள சிவன் கோயில்கள், குலதெய்வ கோயில்களில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் அர்ச்சனைகள் நடந்தது. கோவை ஈஷா யோகா மையம் சார்பில், சிவராத்திரியை முன்னிட்டு, இரவு முழுவதும் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.இரவு 12 மணிக்குமேல் அர்த்தஜாம பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.