சென்னை: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பில், சென்னையில் நடந்த சிவராத்திரி விழாவில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். புரசைவாக்கம், தர்மபிரகாஷ் திருமண மண்டபத்தில், கடந்த, பிப்., 26ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை, சிவராத்திரியையொட்டி, 12 ஜோதிர்லிங்கங்களின் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த விழா வில், சிவராத்திரி அன்று, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, 12 ஜோதிர்லிங்கங்களையும் தரிசித்தனர்.