பதிவு செய்த நாள்
08
மார்
2014
10:03
திருப்பதி: ஆந்திராவில், தேர்தல் முடியும் வரை, ஸ்ரீனிவாச கல்யாண உற்சவங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தேவஸ்தான செயல் அதிகாரி, எம்.ஜி.கோபால் தெரிவித்தார். திருமலை அன்னமய்ய பவனில், நேற்று, தொலைபேசி மூலம், பக்தர்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல பக்தர்கள் பங்கேற்று, தங்கள் ஆலோசனைகளையும், குறைகளையும் தெரிவித்தனர். பின், எம்.ஜி. கோபால் கூறும் போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகி உள்ளதாலும், ஆந்திராவில் தேர்தல் பரபரப்பு அதிகரித்து விட்டதாலும், கோவில் தவிர்த்து, பிற இடங்களில் நடைபெறும், ஸ்ரீனிவாச கல்யாண உற்சவங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, என்றார்.