பதிவு செய்த நாள்
10
மார்
2014
10:03
பாலக்காடு: செம்பை பார்த்தசாரதி கோவில் ஏகாதசி திரு விழாவை முன்னிட்டு, சங்கீத உற்சவ நூற்றாண்டு நிறைவு விழா, நேற்று துவங்கியது; இவ்விழா வரும் ??ம் தேதி வரை நடக்கிறது. கேரளா, பாலக்காடு அருகே கோட்டாயி பார்த்தசாரதி கோவிலில், ஏகாதசி திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. செம்பை வைத்தியநாத பாகவதரால் 65 ஆண்டுகள் நடத்தப்பட்ட சங்கீத உற்சவத்தை, செம்பை வைத்தியநாத பாகவதர் வித்யாபீட மாணவர்கள், சங்கீத கச்சேரியுடன் துவங்கினர். நேற்று, ஹரிப்பாடு கிருஷ்ணகுமாரின் நாதஸ்வர கச்சேரியை தொடர்ந்து, கர்நாடக இசைக்கலைஞர் உன்னிகிருஷ்ணனின் கச்சேரி நடந்தது. இன்று மாலை 5.00 மணிக்கு பாடகி மகதி, 7.30 மணிக்கு சிக்கில் குருசரன் ஆகியோர் சங்கீத ஆராதனை நடத்துகின்றனர். இரவு 8.30 மணிக்கு ராஜேஷ் வைத்யாவின் வீணைக்கச்சேரி நடக்கிறது. ஏற்பாடுகளை செம்பை ஸ்ரீனிவாசன், செம்பை சுரேஷ், செம்பை பிரகாஷ், செம்பை யோகேஷ் உள்ளிட்டோரும், பார்த்தசாரதி கோவில் நிர்வாகிகளும் செய்துள்ளனர்.