பதிவு செய்த நாள்
12
மார்
2014
01:03
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்)
ராசிநாதன் செவ்வாய் மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார். பொருளாதார வளம் அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். மார்ச் 28ல் புதன் சாதகமற்றஇடத்திற்கு சென்றாலும், சுக்கிரன் மார்ச் 31ல் நன்மை தரும் இடத்திற்கு வருகிறார். பண வரவு இருக்கும். சொந்தபந்தம் வருகை தருவர். உடல் நலம் திருப்தி தரும்.மருத்துவச் செலவு குறையும். புதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். மாத தொடக்கத்தில் குடும்பத் தேவை பூர்த்திஆகும். பிற்பகுதியில் செலவு அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு நிலைக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். மாத பிற்பகுதியில், பணிச்சுமையும் அலைச்சலும் இருக்கும். சூரியனால் சிலர் பணி, இடமாற்றத்தை சந்திக்க நேரிடும். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். அதற்கேற்ப வருமானம்கிடைக்காமல் போகாது. மார்ச் 28க்கு பிறகு பொருள் இழப்பு வரலாம். கலைஞர்களுக்கு பிற்போக்கான பலன் இனி இருக்காது. மார்ச்31 க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியருக்கும். மாணவர்களுக்கு மார்ச் 28 வரை புதன் சாதகமாக இருப்பதால் நற்பலன் கிடைக்கும். அதன்பின் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.விவசாயிகள் சிறப்பான மகசூல் காண்பர். புதிய சொத்து வாங்க நல்ல நேரம் அமையும்.பெண்களுக்கு குடும்பத்தாரிடம் நற்பெயர் கிடைக்கும். மாதபிற்பகுதியில் விருந்து, விழா என செல்வர்.
நல்ல நாள்: மார்ச் 17,18,19,20,26,27,28,29, ஏப். 1,2,6,7,13
கவன நாள்: மார்ச் 21,22,23 சந்திராஷ்டமம் கவனம்.
அதிர்ஷ்ட எண் 3,9 நிறம்: சிவப்பு , பச்சை
வழிபாடு:காலையில் எழுந்து சூரிய தரிசனம் செய்யுங்கள். தினமும் வீட்டில் கிருஷ்ணரை வழிபடுங்கள்.வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.