பதிவு செய்த நாள்
11
பிப்
2014
04:02
சோதனைகளை சாதனைகளாக மாற்றும் மீன ராசி அன்பர்களே!
புதன் மார்ச் 9 வரையும், சுக்கிரன் பிப்., 24க்கு பிறகும், மகரத்திற்கு வந்து நற்பலனை தருவர். உங்கள் ராசி நாயகன் குரு என்பதால் அவர் உங்களுக்கு கெடுபலன் செய்ய மாட்டார். மேலும், சனியும், ராகுவும் உங்களுக்கு சாதகமற்ற இடத்தில்தான் உள்ளனர். அதேநேரம் அந்த கிரகங்களை குரு பார்க்கிறது. எனவே கெடுபலனைக் குறைத்துவிடுவார். இந்த கிரகங்களால் உங்களுக்கு எந்த கெடுபலனும் நடக்காது. புதனால் நல்ல பாருளாதார வளம் காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுத்த காரியம் வெற்றி அடையும். உடல்நிலை நன்றாக இருக்கும். சூரியனால் உங்கள் முயற்சியில் தடையும், பொருள் விரயமும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும்.சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். செவ்வாயால் கணவன்-மனைவி இடையே மனக்கசப்பு வரலாம். தொழில், வியாபாரத்தில் லாபநஷ்டம் மாறி மாறி இருக்கும். புதிய வியாபாரம் சீராக நடக்கும். அதிக முதலீடு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும். அரசு வகையில் இருந்த தொல்லைகள் மறையும். மார்ச் 9க்கு பிறகு போட்டியாளர்களின் தொல்லை தலைதூக்கும். பிப்., 15,16,17 மார்ச்14ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க தடை ஏதும் இல்லை. மார்ச் 9க்கு பிறகு மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும். புதனும் சாதகமான இடத்தில் இருப்பதால் போட்டிகளில் வெற்றி காணலாம். மார்ச் 9க்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. விவசாயிகளுக்கு கால்நடை மூலம் பணப்புழக்கம் கூடும். வழக்கு விவகாரங்கள் கடந்த காலத்தை விட அனுகூலமாக இருக்கும். பெண்களுக்கு அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். ஆடம்பர பொருட்கள் வாங்கலாம்.
நல்ல நாள்: பிப்., 15,16,17,18,24,25,26,27மார்ச் 3,4,7,8,14.
கவன நாள்: பிப்., 19,20. சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட நிறம்: பச்சை வெள்ளை எண்: 1,4
வழிபாடு: விநாயகர் வழிபாடும், பெருமாள் துதியும் உங்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும். ராகு- கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.