பதிவு செய்த நாள்
12
மார்
2014
01:03
ரிஷபம் (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிஷம் 1,2)
மார்ச் 28ல் புதன் இடமாறுகிறார். ஆனாலும் அவர் தொடர்ந்து நற்பலன் கொடுப்பார். சுக்கிரன் மார்ச் 31-ந் தேதி வரை நன்மை செய்வார்.சூரியன்,குரு,சனி,ராகு மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார்கள். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். அரசு வகையில் உதவி கிட்டும். உடல் உபாதை நீங்கும். கையில் பணப் புழக்கம்கூடும். மார்ச் 31க்கு பிறகு வீண்விவாதத்தில் ஈடுபட வேண்டாம்.குடும்பத்தில் முன்னேற்றமான சம்பவம்நடக்கும். பெண்களால் நன்மை கிடைக்கும்.கணவன்- மனைவி இடையே அன்பு நீடிக்கும். வீட்டிற்கு தேவையான வசதி பெருகும். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள். தொழில், வியாபாரம் சிறப்பாக இருப்பதால் நல்ல வளர்ச்சி உண்டாகும். லாபத்திற்கு குறைவில்லை. ஏப்ரல் 19,20ல் எதிர்பாராத வகையில் பணம்கிடைக்கும். பணியாளர்கள் திருப்திகரமான நிலையில் இருப்பர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கை நிறைவேறும். மார்ச் 28,29ல் உன்னதமான பலனை காணலாம்.கலைஞர்களுக்கு வளமான வாழ்வு அமையும். பாராட்டு கிடைக்கும். மாத பிற்பகுதியில் முயற்சி எடுத்தே புதிய ஒப்பந்தம் பெற நேரிடும். அரசியல் வாதிகள் நற்பெயரையும், பொருளாதர வளத்தையும் பெறுவர். மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியர்களிடம் நன்மதிப்பு கிடைக்கும்.விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறையிருக்காது. நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை மூலம் லாபமுண்டு. பெண்கள் மகிழ்ச்சியுடன் இருப்பர். கணவரின் அன்பிற்கு குறைவில்லை. ஏப்ரல் 8,9,10- தேதிகளில் புத்தாடை அணி கலன்கள் வாங்கலாம். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.
நல்ல நாள்: மார்ச் 19,20,21,22,23,28,29,30,31 ஏப். 3,4,5,8,9,10
கவன நாள்: மார்ச் 24,25 சந்திராஷ்டமம் கவனம்.
அதிர்ஷ்ட எண்: 1,3,7 நிறம்: மஞ்சள் பச்சை
வழிபாடு: முருகனை வழிபட்டு வாருங்கள். பவுர்ணமியன்று கேதுவுக்கு அர்ச்சனை செய்யலாம். பத்திரகாளிஅம்மனுக்கு எலுமிச்சை பழ தீபமேற்றி வணங்குங்கள்.