பதிவு செய்த நாள்
12
மார்
2014
01:03
மகரம் ( உத்திராடம் 2,3,4 திருவோணம், அவிட்டம்1,2)
சூரியன், சுக்கிரனால் நற்பலன் உண்டாகும். கடந்த காலத்தில் இருந்து பொருள் விரயம் குறையும். காரிய அனுகூலம் ஏற்படும். நல்லவளர்ச்சியும், பொருளாதார வளமும் உண்டாகும்.உங்களுக்கு இருந்து வந்த அவப்பெயர் மார்ச் 28ல் புதன் இடமாறுவதால் மறையும்.குடும்பத்தில் மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும். பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். வீட்டுப் பெண்களால் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். உடல்நலம் சுமாராக இருக்கும். செவ்வாயால் ஆரோக்கியம் குறையலாம். வயிறு பிரச்னை ஏற்படலாம் கவனம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் லாபம் சிறப்பாக இருக்கும். மார்ச்30க்கு பிறகு நல்ல வளர்ச்சி உண்டாகும்.அரசின் சலுகை கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.ஏப்ரல்6,7ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். பணியாளர்களுக்கு மாதத்தொடக்கத்தில்பணியில்பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு வீண் மனக்குழப்பம் வரலாம். மார்ச்30க்கு பிறகு வேலையில் மகிழ்ச்சி உண்டாகும். மார்ச் 19,20ல் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற்று, பொருளாதார வளம் காண்பர். மார்ச் 30க்கு பிறகு மதிப்பு,மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருதுபோன்றவை கிடைக்கும். மாணவர்கள் மிகுந்த சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். கடும் உழைப்புக்கு தகுந்த பலன் விரைவில் கிடைக்கப் பெறுவீர்கள்.விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். அதற்கேற்ப வருமானம் காண்பர். குறிப்பாக பழ வகைகள் பயறு வகைகள், கீரைபோன்றவை மூலம் நல்ல வருவாய் காணலாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.பெண்களுக்கு கணவர் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். வேலை பார்க்கும் பெண்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். மார்ச் 30,31ல் ஆடை, அணிகலன் வாங்கலாம்.
நல்ல நாள்: மார்ச் 19,20,21,22,23,26,27,30,31, ஏப். 6,7,8,9,10
கவன நாள்: மார்ச் 15,16, ஏப். 11,12 சந்திராஷ்டமம்
கவனம்அதிர்ஷ்ட எண்: 3,5 நிறம்: சிவப்பு,வெள்ளை
வழிபாடு: குல தெய்வத்தை வணங்குங்கள். ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள். சிவன் கோவிலுக்குச் சென்று வாருங்கள். ஆதரவற்ற மூதாட்டி, சந்நியாசிகளுக்கு உதவுங்கள்.