பதிவு செய்த நாள்
14
மார்
2014
11:03
பவானி: பவானி காய்கறி மார்க்கெட் படித்துறையில் உள்ள, ஸ்ரீஐயப்பன், ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.கடந்த, 12ம் தேதி மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன், விழா துவங்கியது. நேற்று அதிகாலை, 3.15 மணிக்கு கணபதி பூஜை, வருண பூஜை, யாகபூஜை நடந்தது. காலை, ஆறு மணிக்கு, மூலஸ்தான கோபுரம், ஸ்ரீஐயப்பன், ஸ்ரீசக்தி விநாயகர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. மணிகண்டசிவாச்சாரியார் மற்றும் குழுவினர்கள் பூஜைகளை செய்தனர்.பவானி எம்.எல்.ஏ., நாராயணன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், சக்தி விநாயகர் கோவில் விழா குழுவினர் அக்னிராஜா, பசுபதிராஜா, ஜெகநாதன், பொன்ராஜ், சங்கமேஸ்வரன், மகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.