பதிவு செய்த நாள்
14
மார்
2014
11:03
பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவில், உண்டியல்கள் திறக்கப்பட்டது. அதில், 6.07 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், 21 உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நடந்தது. மருதமலை துணை ஆணையர் பழனிகுமார், திருப்பூர் உதவி ஆணையர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். சங்கமேஸ்வரர் கோவில் உண்டியல் மூலம், ஐந்து லட்சத்து, 48 ஆயிரத்து, 29 ரூபாயும், பசு பராமரிப்பு உண்டியலில், 20 ஆயிரத்து, 403 ரூபாயும், கோவில் யானை வேதநாயகி பராமரிப்பு உண்டியலில், பத்தாயிரத்து, 561 ரூபாய் இருந்தது. தங்கம், 59 கிராம், வெள்ளி, 105 கிராம் இருந்தன. இக்கோவிலின் கட்டுப்பாட்டில் உள்ள, பழனியாண்டவர் கோவில் உண்டியலில், 23 ஆயிரத்து, 821 ரூபாய், காவேரி வீதி காசி விஸ்வநாதர் கோவில் உண்டியலில், 4,061 ரூபாய் என மொத்தம், ஆறு லட்சத்து, 6,875 ரூபாய் காணிக்கையாக, 75 நாட்களில் கிடைத்துள்ளது.