பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயம் சார்பில் 78 வது சிவஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பாலக்காடு ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த விழாவில், கோவை கே.ஜி., மருத்துவமனையின் தலைவர் பக்தவச்சலம், தலைமை வகித்தார். அவர் பேசுகையில், ராஜயோக தியானத்தை கற்பதன் மூலம் விளையும் நன்மைகள் குறித்து விவரித்தார். தொடர்ந்து, சிவராத்திரிக்கும் சிவஜெயந்திக்கும் உள்ள வேறுபாடு, அமைப்பின் உறுப்பினர்களால் விளக்கப்பபட்டது; கூட்டுத்தியானம் நடத்தப்பட்டது. இதில் தியான அமைப்பின் பொள்ளாச்சி ஒருங்கிணைப்பாளர் சேதுராமசாமி, திருப்பூர் அமைப்பாளர் ரேணுகா, ஊட்டி பகுதி உறுப்பினர் சரஸ்வதி, சமத்தூர் ஜமீன் ஆனூர் சாந்தி வாணவராயர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.