மேலுார்: மேலுார் அருகே அம்பலகாரன்பட்டியில் வல்லடிகாரர் சுவாமி கோயிலில், மாசி திருவிழா நடந்தது. அதில், வெள்ளலுார் நாடு எனப்படும் 60 கிராமத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் கலந்து கொண்டனர். நேற்று இரவு வல்லடிகாரர், பூரணி மற்றும் பொற்கலையம்பாளுடன் சப்பரத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைதொடர்ந்து காவடி மற்றும் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.