திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம் மார்ச் 21-ல் நடக்கிறது. தேர் வடம் பிடித்து இழுக்க கிராமத்தினரை அழைக்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது.கடந்த வாரம் துவங்கிய இத்திருவிழாவின் முக்கிய நிகழச்சியாக, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் மார்ச்- 20 மதியம் 12.30 மணி முதல் 12.45 மணிக்குள் நடக்கிறது. மார்ச் 21-ல் தேரோட்டம் நடக்கிறது.திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள 43 கிராமத்தினர் வடம் பிடித்து இழக்க மலையை சுற்றி வைரத்தேர் வலம் வரும். தேர் இழுக்க கிராமத்தினை அழைக்கும் நிகழ்ச்சி ஸ்தானிகபட்டர் சுவாமிநாதன் தலைமையில் நடந்தது. வீடுவீடாக சென்று வெற்றிலை பாக்கு, திருவிழா பத்திரிகை கொடுத்து அழைப்பு விடப்பட்டது.