சங்கராபுரம்:சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. சங்கராபுரம் பகுதியில் கடந்த இரு ஆண்டுகளாக பருவ மழை பொய்த்தது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.மழை வேண்டியும், மக்கள் நலன் வேண்டியும் தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் வேள்வி பூஜை நடந்தது. நாட்டார் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ரவி குருக்கள் தலைமையில் பூஜைகளை செய்திருந்தனர்.